விளையாட்டு

ஒரு நாள் போட்டியில் இதுவரை 200 ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல்

Summary:

List of players who all are scored 200 runs in one day cricket

ஒருநாள் போட்டியில் இதுவரை பல  பேட்ஸ்மேன்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். குறிப்பாக இரட்டை சதம் அடிப்பதென்பது மிகவும் சாதாரண விஷயம் அல்ல.  நிலைத்து நின்று ஆடி சதங்கள் விளாசுவது எளிது ஆனால் இறுதி வரை நின்று இரட்டை சதங்கள் விளாசுவது என்றால் அது மிகவும் கடினம்.

அப்படி நிதானமாக ஆடி ஒருநாள் போட்டிகளில் தனி நபராக 200 ரன்கள் மைல்கல்லை கடந்த வீரர்களின் பட்டியலை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.

6. சச்சின் டெண்டுல்கர் -200*

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்திலும் தனது திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சச்சின். ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரரும் இவரே.

இவர் 2010ம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்.

5. ஃபாகார் ஜமான் – 210* 

இந்த சாதனையை நிகழ்த்தியை முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை ஃபாகார் ஜமான் ஐ சேரும். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அணிக்கு ஒரு சிறந்த துவக்க வீராகவும் செயல்பட்டு வருகிறார் ஃபாகார் ஜமான்.

4. கிறிஸ் கையில் – 215

அதிரடிக்கு பெயர்போன வேஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர் டி20 போட்டியில் மட்டுமல்ல ஒருநாள் போட்டியிலும் தனது அதிரடியை காட்டி பல சாதனைகளை படைத்துள்ளார் .

இவர் 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினார்.

3. விரேந்தர் சேவாக் – 219

இந்திய அணியின் துவக்க வீரரான சேவாக், தனது அதிரடியை முதல்  பந்தில் இருந்தே பௌலர்களை துவம்சம் செய்ய கூடியவர்.

இவர் 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 219 ரன்கள் விளாசி இந்த சாதனையை நிகழ்த்தினார். 

2. மார்ட்டின் கப்டில் – 237*

2015ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் கப்டில்.

இந்த சாதனையை படைத்த 5வது வீரர் இவர்.

1. ரோஹித் சர்மா – 208*, 209, 264 

ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் 208 மற்றும் 264 ரன்களை இலங்கை அணிக்கு எதிராகவும், 209 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் அடித்துள்ளார்.


Advertisement