தளபதி விஜய்யின் புகைப்படத்தை டாட்டூவாக குத்தியுள்ள கொல்கத்தா வீரர் – வைரலாகும் புகைப்படம்.

தளபதி விஜய்யின் புகைப்படத்தை டாட்டூவாக குத்தியுள்ள கொல்கத்தா வீரர் – வைரலாகும் புகைப்படம்.


kkr-player-varum-chakravarthy-vijay-tatoo-goes-viral

கொல்கத்தா அணியில் விளையாடிவரும் தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் புகைப்படத்தை தோள்பட்டையில் டாட்டூவாக குத்தியிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அணிகளுக்கு இடையிலான முதல் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்து தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகளுக்கு இடையிலான போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

kkr

இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் தமிழக வீரர் வரும் சக்ரவர்த்தியின் டாட்டூ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. சுழற் பந்து வீச்சாளரான வரும் சக்கரவர்த்தி ஒரு தீவிர விஜய் ரசிகர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தனது இடது கையின் தோள்பட்டையில் தலைவா படத்தில் விஜய் கை தூக்கி திரும்பி நிற்கும் படி இருக்கும் போஸை டாட்டூவாக தனது கையில் குத்தியுள்ளார்.

இதனை கண்டுபிடித்து, அந்த புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கிவருகின்றனர்.

kkr

kkr