பிறந்தநாள் காணும் ரன் மெசின் கோலி; எத்தனையாவது பிறந்தநாள் தெரியுமா?

Summary:

Kholi 30th birthday

கிரிக்கெட்டின் ரன் மெசின் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அந்த நபர் வேற யாரு..  நம்ம கிங் கோலி தான். இவர் இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

இந்திய அணியின் கேப்டன் கோலி சர்வதேச அளவில் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 6331 ரன்களும் 24 சதங்களும் 6 முறை இரட்டை சதங்களும் அடித்துள்ளார். மேலும் 216 ஒருநாள் போட்டியில் ஆடியுள்ள அவர் 10,232 ரன்களும் 38 சதங்களும் அடித்துள்ளார். 29 வயதே ஆன விராட் கோலி இன்னும் பல்வேறு சாதனைகள் புரிவார் என்பதில் சந்தேகமில்லை.

சச்சினின் சாதனைகள் அனைத்தையுமே இவர் நிச்சயம் முறியடித்து விடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விசயமே. 

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விராட் கோலிக்கு உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.அவர் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டி பலர் வாழ்த்துகின்றனர். 

 


Advertisement