விளையாட்டு வீடியோ

ஒட்டகத்த கட்டிக்கோ... தமிழ் பாடலுக்கு ஆட்டம் போட்ட இங்கிலாந்து வீரர்! இணையத்தை கலக்கும் வீடியோ!

Summary:

kevin piterson dance for gentleman video

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் கெவின் பீட்டர்சன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிவரும் நிலையில், பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் அனைவரும் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும் ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள்,  ஐபிஎல் போன்றவை தடைசெய்யப்பட்ட நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே சமூக விலகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பொழுதுபோக்கும் விதமாக டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவது, நேரலையில் கலந்துரையாடுவது என பிஸியாக இருந்து வருகின்றது.

சமூக வலைதளங்களில் பரபர

இவ்வாறு  கெவின் பீட்டர்சனும்  தமிழ் பாடல்களுக்கு டிக் டாக் வீடியோக்களை செய்துள்ளார். மேலும் விராட் கோலியுடன் நேரலையில் ஐபிஎல் போட்டிகள்,  கொரோனா பாதிப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார். அதனை தொடர்ந்து பீட்டர்சன் தற்போது ஜெண்டில்மேன்  படத்தில் இடம் பெற்ற ஒட்டகத்தை கட்டிக்கோ பாடலுக்கு  டிக்டாக்வீடியோ செய்துள்ளார்.  இதனை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement