அம்பயரை முட்டி தூக்கிய ஜேசன் ராய்! சதம் அடித்தும் கொண்டாட முடியாத சோக நிகழ்வு

Jason roy crashed umbire while crossing the field


Jason roy crashed umbire while crossing the field

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் 12வது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஜேசன் ராய் அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது. ஏற்கனவே 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டு முறை வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது. எனவே இந்தமுறை வென்றே தீரவேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கியுள்ளது இங்கிலாந்து அணி.

wc2019

துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் மற்றும் பெயர்ஸ்டோவ் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். இருவருமே அரைசதத்தை கடந்தனர். 51 ரன்கள் எடுத்த நிலையில் பெயர்ஸ்டோவ் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்தும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய், முஸ்தாபிஜூர் வீசிய 27 ஆவது ஓவரில் ஒரு சிறப்பான நான்கினை அடித்து சதம் அடித்தார். ஜேசன் ராய் சதம் அடித்த பந்தினை லெக் சைடில் மடக்கியடித்தார். கைக்கு வந்த பந்தை பீல்டர் மிஸ் செய்ததால் பந்து நான்கை கடந்தது. ஜேசன் ராய் எளிதாக சதத்தை கடந்தார்.

wc2019

அந்த சமயத்தில் ஜேசன் ராய் பந்தினை பார்த்தவாரே எதிர்முனைக்கு ஓடி வந்தார். எதிர்முனையில் இருந்த அம்பயரும் பந்தினை பார்த்தவாரே நகர்ந்து கொண்டிருந்தார். அப்போது ஓடி வந்த ஜேசன் ராய் அம்பையர் மீது மோதியதில் அம்பயர் கீழே சரிந்து விழுந்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஜேசன் ராய் சதத்தை கொண்டாட முடியாமல் போனது.