மீண்டும் கெத்து காட்டிய ஜடேஜா.! தரவரிசையில் தானாகவே முதலிடத்தை பிடித்து அசத்தல்.!

மீண்டும் கெத்து காட்டிய ஜடேஜா.! தரவரிசையில் தானாகவே முதலிடத்தை பிடித்து அசத்தல்.!


jadeja first place in allrounder

ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதமும், 9 விக்கெட்டும் கைப்பற்றிய போது முதலிடத்திற்கு முன்னேறிய ஜடேஜா அடுத்த டெஸ்டில் தடுமாறியதால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இந்த நிலையில் ஜாசன் ஹோல்டர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தடுமாறியதால் 357 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து ஜடேஜா 385 புள்ளிகளுடன் தானாகவே முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர். அதில் ரோகித் சர்மா 7-வது இடத்திலும், விராட் கோலி 9-வது இடத்திலும், ரிஷப் பாண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.