
ishanth sharma talk about samy
அமெரிக்காவில் போலீஸ் பிடியில் இருந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25-ம் தேதி கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அமெரிக்காவே போராட்ட களமாக மாறியது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீர்ர் டேரன் சமி, தானும் நிறவெறிக்கு ஆளானதாக புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய போது, தன்னையும் இலங்கை வீரர் திசர பெரேராவையும் ‘kaluu’ என்ற இழிசொல்லால் அழைத்ததாக டேரன் சமி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
Ishant Sharma used racist word against Sammy
— CricFit (@CricFit) June 9, 2020
.
.#darrensammy #racism #IndianCricket #TeamIndia #IshantSharma #America pic.twitter.com/aFTRLF7nbZ
இந்நிலையில் 2014-ல் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் டேரன் சமியை காலு எனக் குறிப்பிட்டுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த புவனேஸ்வர் குமார், ஸ்டெய்ன், சமி ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இஷாந்த் சர்மா பெயர்களைக் குறிப்பிடும்போது சமியின் பெயரை காலு எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டேரன் சமி இன்ஸ்டாகிராம் வீடியோவில் கொந்தளித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் இஷாந்த் ஷர்மாவை சமியிடம் சிக்கும் வகையில் இஷாந்த் சர்மாவின் இன்ஸ்டகிராம் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
Advertisement
Advertisement