இந்தியா விளையாட்டு

ஐபில்-2019 ல் இந்த வீரர்கள் தான் அதிக ரன், விக்கெட் எடுப்பார்கள்- இங்கிலாந்து மு.கேப்டன் மைக்கேல் வாகன்.!

Summary:

IPL2019 - Michel vaughen - rishaphant- kuldeep yadev

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரானது 11 சீசன் முடிந்து 12வது சீசன் நேற்று தொடங்கியது. இத்தொடர் முடிந்ததும் உலகக்கோப்பை போட்டியானது துவங்க இருப்பதால் அணிகளில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களும் உலகக்கோப்பை போட்டித் தொடரில் இடம் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பதால் ஒவ்வொரு போட்டிக்கும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதுவரை அதிகபட்சமாக 3 முறை கோப்பையை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் 4வது முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் திறமையான வீரர்கள் இடம் பெற்றும் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் கடுமையாக போராடும்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஐபிஎல் போட்டி குறித்து கூறும்போது: ரோஹித் சர்மா, விராட் கோலி, வில்லியம்சன், டேவிட் வார்னர் ஆகியோர் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் அதிக ரன்களை அடிப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தமட்டில் ரிஷப் பண்ட் தான் ஆரஞ்சு தொப்பியை பெறுவார். அதேபோல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலராக நீங்கள் ரஷீத் கானை பார்க்கலாம். என்னை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று நினைக்கிறேன் என மைக்கேல் வாகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 


Advertisement