விளையாட்டு

ஐபில் அணிகளின் தற்போதைய புள்ளி பட்டியல் நிலவரம்!! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..

Summary:

ஐபில் 14 வது சீசன் மீதமுள்ள போட்டிகள் நாளைமுதல் தொடங்க உள்ளநிலையில், அணிகளின் தற்போதைய புள

ஐபில் 14 வது சீசன் மீதமுள்ள போட்டிகள் நாளைமுதல் தொடங்க உள்ளநிலையில், அணிகளின் தற்போதைய புள்ளி பட்டியல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கிய ஐபில் சீசன் 14 வது T20 போட்டிகள் 29 போட்டிகள் முடிந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் மீண்டும் நடத்தப்படுமா? போட்டிகள் கைவிடப்படுமா என கேள்வி எழுந்தநிலைலையில், மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

அதன்படி நாளைமுதல் ஐபில் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளநிலையில் 8 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் டெல்லி அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.

7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அதே 10 புள்ளிகளுடன் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும், 8 புள்ளிகளுடன் மும்பை அணி 4 வது இடத்திலும் உள்ளது.

தலா 6 புள்ளிகளுடன் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் 5 மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 7 வது இடத்திலும், 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஹைதராபாத் அணி 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8 வது இடத்திலும் உள்ளது.


Advertisement