IPL 2020 அட்டவணையில் புதிய மாற்றம்! வெளியானது லீக் சுற்றின் அட்டவணை பட்டியல்

IPL 2020 அட்டவணையில் புதிய மாற்றம்! வெளியானது லீக் சுற்றின் அட்டவணை பட்டியல்


IPL 2020 first league full schedule

2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29 ஆம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் லீக்கின் முழு அட்டவணையும் வெளியாகியுள்ளது. 

மார்ச் 29 ஆம் மும்பையில் நடக்கவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 56 போட்டிகளை கொண்ட லீக் சுற்றானது மே 17 ஆம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதும் ஆட்டத்துடன் முடிவடைகிறது. 

IPL2020

நாக் அவுட் சுற்றுகள் குறித்த அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. வழக்கமாக 44 நாட்கள் நடைபெறும் லீக் சுற்று இந்தமுறை 50 நாட்கள் நடைபெறவுள்ளது. 

IPL2020

காரணம் சென்ற ஆண்டை போல இந்த முறை சனிக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் நடைபெறபோவதில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இரண்டு போட்டிகள் நடைபெறும்.