
IPL 2019 srh vs dc eliminator 1 match result
ஐபில் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் ஐபில் சீசன் 12 சாம்பியன் கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்பது தெரிந்துவிடும். இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
மேலும் நேற்றைய ஆட்டத்தில் கைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன் எடுத்தது.
163 என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி தோற்றுவிடும் என்ற நிலை வந்த போது அதை தலைகீழாக திருப்பி போட்டது ஹைதராபாத் அணியின் 18 வது ஓவர்.
பாசில் தம்பி வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள், 2 சிங்கிள் என மொத்தம் 26 ரன்கள் எடுக்கப்பட்டது. இந்த ஒரு ஓவர்தான் கைதராபாத் அணியின் வெற்றிக்கு முட்டு கட்டையாக அமைந்தது. ஒருவேளை 18 வது ஓவர் சரியாக வீசப்பட்டிருந்தால் நிச்சயம் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றிருக்கும்.
Advertisement
Advertisement