ஐபில் 2019: மிக அதிக வயதுடைய வீரர் மற்றும் அவரது வயது என்ன தெரியுமா? இதோ!ipl-2019-most-aged-player-name-and-age

2019 ஐபில் சீசன் 12 மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கின்றது. முதல் சுற்று இன்னும் முடிவு பெறாத நிலையில் இரண்டாவது சுற்றுக்கு செல்ல அணைத்து அணிகளும் போராடி வருகிறது. சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

IPL 2019

பொதுவாக ஐபில் என்றாலே இளம் வீரர்கள், அதிரடியானா ஆட்டம் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த சீசனில் மிகவும் அதிக வயதுடைய வீரர் பற்றித்தான் இங்கே பார்க்கவுள்ளோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இம்ரான் தாஹிர் இந்த சீசனில் மிகவும் அதிக வயதுடைய வீரராவார். 40 வயதாகும் தென்னாப்ரிக்காவை சேர்ந்த இம்ரான் தாஹிர் இந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

அதேபோல் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் வெஸ்டிண்டிசை சேர்ந்த க்ரிஷ் கெய்ல் அதிக வயதுடை ஐபில் வீரர்களில் இரண்டாவது வீரராவார். இவரது வயது 39. 

IPL 2019