வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் ஐபிஎல் ஸ்டிக்கர்; ரசிகர்களுக்கு இனி ஜாலிதான்.!
வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் ஐபிஎல் ஸ்டிக்கர்; ரசிகர்களுக்கு இனி ஜாலிதான்.!

ஐபிஎல் 12வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணியும் டெல்லி அணியும் தகுதி பெற்று விட்டன. இந்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையே நேற்றைய போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில் மற்ற 2 இடங்களை பிடிக்க கொல்கத்தா, பஞ்சாப், மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் விறுவிறுப்பாக நடக்கும் இனி வரும் போட்டிகளை காண ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் நிலவுகிறது.
இந்நிலையில், போட்டி நிலவரம் குறித்த உடனுக்குடனான அப்டேட்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, ஐ.பி.எல் தொடர்பாக பிரத்யேகமாக ஸ்டிக்கர்கள் வாட்ஸ்அப் செயலியில் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுடைய வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பதிப்பில் மட்டும் ஐ.பி.எல் ஸ்டிக்கர் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் ஐ.ஓ.எஸ் தளத்தில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.