எங்க வந்து யாரு சீன போடுறது மீண்டும் தல தோனியின் அசுரவேக ஸ்டெம்பிங்.!

எங்க வந்து யாரு சீன போடுறது மீண்டும் தல தோனியின் அசுரவேக ஸ்டெம்பிங்.!


ipl-2019---csk-vs-kkr---ms-dhoni-stumped---supmen-kill

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 22 போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் 23 வது போட்டியானது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நேற்று சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதிரடி ஆட்டக்காரர்களுடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் லின் மற்றும் ராணா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

IPL 2019

கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஸ்ஸலும் மற்ற அணிகளிடம் காட்டிய சூறாவளி ஆட்டத்தை சென்னை அணியிடம் காட்ட முடியவில்லை. எப்போதும் அதிரடியாக விளையாடும் ரஸ்ஸல் நேற்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் 50 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார். ஆரம்பத்தில் இருந்து சொதப்பிய கொல்கத்தா அணி இறுதி ஓவரில் எடுத்த 15 ஓட்டங்கள் மூலம் அணியின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்தது.

109 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, தனது ஆட்டத்தை நிதானமாக தொடங்கியது. முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 17.2 ஓவர்களில் 111 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கே வீரர் டுபிளசி அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தார்.

IPL 2019

இப்போட்டியில் கொல்கத்தா வீரர் சுப்மான் கில்லை தனது அசுர வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து மிரட்டினார் தல தோனி. கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது, இம்ரான் தாஹிர் வீசிய போட்டியின் 11வது ஓவரின் முதல் பந்தை சுப்மான் கில் எதிர்கொண்டார். அப்போது பந்தை கில் தவறவிட, அது நேராக விக்கெட் கீப்பர் தோனியின் கைக்கு சென்றது. இதையடுத்து ஸ்டெம்ப்பை மின்னல் வேகத்தில் தோனி பதம் பார்க்க, கில் விக்கெட்டை பறிகொடுத்து பரிதாபமாக வெளியேறினார்.