தல தோனிக்கு உதவுங்கள், சென்னை ஐஐடி கேள்வித்தாளில் இடம் பெற்ற சுவாரசியமான கேள்வி என்ன தெரியுமா?

ipl 2019 - chennai iit - semester exam question - thala dhoni


ipl 2019 - chennai iit - semester exam question - thala dhoni

ஐபிஎல் சீசன் 12 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு எளிமையாக நுழைந்தது. நான்காவது அணியாக யார் முன்னேறுவது என்று பலபரீட்சை நடந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக கொல்கத்தாவை முந்தி ஹைதராபாத் அணி தகுதி பெற்றது.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

IPL 2019

சென்னை சிஎஸ்கே அணிக்கு சென்னை தவிர இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அப்படி ரசிகர்களை கொண்ட சென்னை அணிக்கு சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்திலும் இல்லாமலா போய்விடும். இன்றைய போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளதால் சென்னை ஐஐடி கல்லூரியில் நடைபெற்ற ஐஐடி மெடீரியல் மற்றும் எனர்ஜி பேலன்ஸ் பாட தேர்வில் இன்றைய போட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

நடப்பு நிகழ்வுகளை மையமாக கொண்டு கேட்கப்பட்ட அந்த கேள்வியில் இன்றைய போட்டியானது இரவு ஆட்டமாக நடைபெற உள்ளதால் போட்டியின் முடிவில் பனிப்பொழிவு முக்கிய அங்கம் வகிக்கும். அந்த வகையில் போட்டி துவங்கும்போது 39 டிகிரி செல்சியஸ் இருக்கும் வெப்பநிலையானது நேரம் செல்லச் செல்ல 27 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்து பனிப்பொழிவு அதிகரிக்கும்.

IPL 2019

இந்த வேளையில் பந்தில் ஈரத்தன்மை அதிகமாகி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்தை நன்றாக சுழல செய்வதில் சிரமம் ஏற்படும். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களும் சரியான நீளத்தில் பந்து வீசுவதற்கு சிரமப்படுவார்கள். இதனால் பெரும்பாலான போட்டிகளில் டாஸ் வின் செய்யும் அணித்தலைவர்கள் முதலில் பந்து பேசுவதையே தேர்ந்தெடுப்பார்கள். 

இந்நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி டாஸ் வின் செய்தால் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க வேண்டுமா? அல்லது பேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டுமா என்று தல தோனிக்கு உதவும் வகையில் மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்வியானது இந்தியா முழுவதும் வைரலான நிலையில் ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.