விளையாட்டு

இந்த அணி தான் T20 உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது.! காரணத்துடன் கூறும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்.!

Summary:

இந்த அணி தான் T20 உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது.! காரணத்துடன் கூறும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்.!

2021ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் வரும் 24ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் 021ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பையை எந்த அணி கைப்பற்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இன்சமாம் உல் ஹக், எந்த தொடரிலுமே எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று கணிப்பது கடினம். ஆனால் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கூறமுடியும். அந்தவகையில், இந்த டி20 உலக கோப்பையை பொறுத்தவரையில், இந்திய அணிக்குத்தான் கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக ஆடுகளத்தில்.

மேலும், மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இந்திய அணியில் உள்ளனர். அதிகபடியான இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சளார்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்களில் விளையாடிய நிறைய அனுபவம் உள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது, இதில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர் என கூறியுள்ளார்.


Advertisement