முதல் டெஸ்டிலே தடுமாறும் இந்திய அணி! விக்கெட்டுகளை அள்ளிக்குவிக்கும் நியூசிலாந்து!

முதல் டெஸ்டிலே தடுமாறும் இந்திய அணி! விக்கெட்டுகளை அள்ளிக்குவிக்கும் நியூசிலாந்து!



indian team playing very bad in first test

இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதில் டி20 போட்டிகளில் 5-0 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்தநிலையில், நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது. 

India

இந்திய அணியின் துவக்க வீரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். இந்திய அணி ஆரம்பத்திலே தடுமாற்றத்தை சந்தித்தது. பிரித்வி ஷா 16 ரன்களில் டிம் சவுதி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து, மயங்க் அகர்வாலுடன் சத்தீஷ்வர் புஜார ஜோடி சேர்ந்தார். 

மயங்க் அகர்வால் மற்றும் புஜார இருவரும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஜேமிசன் வீசிய பந்தில் புஜாரா 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக களமிறங்கிய ஹனுமா விகாரி 7 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். தற்போதுவரை இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்துள்ளது.