ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; தோனி அதிரடி நீக்கம்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; தோனி அதிரடி நீக்கம்



indian team for australia series

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

அடுத்த மாதம் துவங்கும் இந்த தொடருக்கான டி20 மற்றும் டெஸ்ட் அணிக்கான இந்திய வீரர்களை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 டி20 போட்டிகளுக்கான இந்திய வீரர்களையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டியில் இடம்பெறும் இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் (கேப்டன்), தவான், தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, பண்ட், குல்தீப், க்ருனால் பாண்டியா, சாகல், லோகேஷ் ராகுல், கலீல் அகமது, பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ், சபாஷ் நதீம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் விவரம்(மூன்று 20 ஓவர் போட்டிகள் ஆஸ்திரேலியாவுடன்):விராட் கோலி(கேப்டன்), ரோகித் (துணை கேப்டன்), தவான், தினேஷ் கார்த்திக், க்ருனால் பாண்டியா, மனிஷ் பாண்டே, பண்ட், குல்தீப், ஸ்ரேயாஸ் அய்யர், சாகல், லோகேஷ் ராகுல், கலீல் அகமது, பூம்ரா, புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் விவரம்(4 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுடன்): விராட் கோலி(கேப்டன் ), ரோகித், விஜய், புஜாரா, ரகானே, ஹனுமா விகாரி, பண்ட், பார்திவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப், முகமது சமி, இஷாந்த், லோகேஷ் ராகுல், பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 20 ஓவர் போட்டிக்கு ரோகித் தலைமை ஏற்கிறார்.அதேபோல் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து நடைபெறும் இந்த இரண்டு டி20 தொடரில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதன்மூலம் தோனியின் டி20 சகாப்தம் முடிந்து விட்டதா என ரசிகர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.