தோனி அளவிற்கு யாரும் அணிக்காக தன்னை அர்ப்பணித்தது இல்லை- கபில்தேவ் புகழாரம்.!

தோனி அளவிற்கு யாரும் அணிக்காக தன்னை அர்ப்பணித்தது இல்லை- கபில்தேவ் புகழாரம்.!


indian-cricket-team---msdhoni---kabildev

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் முன்னாள் அணித்தலைவருமானவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளதால் ரசிகர்களால் தல தோனி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு களமிறங்கினார் தல தோனி.

தனது சிறப்பான அதிரடி ஆட்டங்களின் மூலம் இந்திய அணியின் பெரும்பாலான வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் 2007 முதல் 2016 முடிய உள்ள காலகட்டத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இவருடைய தலைமையில் இந்திய அணி ஐசிசி டி20 உலகக்கோப்பை, காமன்வெல்த் தொடர், ஆசிய கோப்பை தொடர், ஐசிசி உலகக்கோப்பை, ஐசிசி சாம்பியன் கோப்பை போன்ற தொடர்களில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

cricket

ஐபிஎல் வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் இவர் தலைமையின் கீழ் செயல்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்று விளையாடிய பெரும்பாலான சீசன்களில் அரையிறுதி, இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது. இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

மேலும் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையை சிஎஸ்கே அணி பெற்றுள்ளது. இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால் நான்காவது முறையும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.

cricket

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தல தோனியை பெருமைப்படுத்தும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, தோனி அளவிற்கு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்தியாவிற்காக தன்னை முழுமையாக அர்ப்பனித்தது இல்லை. நாம் அனைவரும் நிச்சயம் தோனியை பாராட்டி மேலும் வெற்றி பெற வாழ்த்த வேண்டும். அவர் மீண்டும் இந்திய அணிக்கு உலகக்கோப்பை பெற்று தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.