விளையாட்டு

தொடர்ந்து மூன்றாவது முறையாக சேசிங்! தொடரை வெல்லுமா ரோகித் சர்மாவின் படை

Summary:

india won the toss and field first

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அதன் பிறகு தொடங்கிய T20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிறகு நேற்று முன் தினம் தொடங்கிய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளும் 1-1 என்று சம நிலையில் உள்ள தொடரை வெல்லப்போவது யார்? என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி ஆனது ஹாமில்டன் மைதானத்தில் இன்று துவங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா முதலில் பந்து வீசும் என்று அறிவித்துள்ளார். எனவே தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தொடரில் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. சுழற்பந்து வீச்சாளர் சாகலுக்கு பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குலதீப் ஆடுகிறார். 


Advertisement