இந்தியா விளையாட்டு

இந்தியா வெற்றிபெற்றதும் செம கோபம்..!! வைரலாகும் இலங்கை பயிற்சியாளரின் செயல்..! வைரல் வீடியோ..

Summary:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெ

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றநிலையில், நேற்று நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கம் முதலே இலங்கை அணி வீரர்கள் நிதானமாக ஆடியநிலையில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்தது.

276 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ப்ரித்விஷா 13 ரன்களிலும், தவான் 29 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். மனிஷ் பாண்டே (37 ரன்கள்), சூரியகுமார் யாதவ் (53 ரன்கள்), குர்னால் பாண்டியா (35 ரன்கள்) என பேட்ஸ்மேன்கள் அனைவரும் நடையை கட்ட, தனியாளாக போராடி இந்திய அணியை வெற்றிபெற செய்தார் தீபக் சாகர்.

இறுதியில் இந்திய அணி 49. 1 வது ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், இலங்கை அணியின் பயிற்சியாளர் ஆர்தர் கோபமாக டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை எளிதாக ஆட்டமிழக்க செய்த இலங்கை வீரர்களால், இந்திய அணியின் பவுலரான தீபக் ஷாகரை ஆட்டமிழக்க செய்யமுடியவிலையே என்பதுதான் அவரது கோவத்துக்கு காரணம் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.


Advertisement