நூலிழையில் வெற்றியை நழுவிய இந்திய அணி!! கடும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்!!

நூலிழையில் வெற்றியை நழுவிய இந்திய அணி!! கடும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்!!


india-vs-austrelia-t20-result

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறங்கினார். மேலும் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு உமேஷ் யாதவும் விஜய் சங்கருக்கு பதிலாக மயங் மார்க்கண்டேயரும் களமிறங்கினர்.

india vs austrelia
இந்திய அணியின் துவக்க மட்டையாளர்களாக, ரோகித் சர்மாவும், கேஎல் ராகுலும் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் ரிச்சர்ட்சன் ஆட்டத்ரிக்கு முதல் ஓவரினை சிறப்பாக வீசி 1 ரன் மட்டுமே கொடுத்தார். ஆட்டத்தின் ஆரம்பத்திலே இந்திய அணி தடுமாறியது.

மூன்றாவது ஓவரினை பெக்ரன்டப் வீசினர், அந்த பந்தினை ரோகித் சர்மா சம்பாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அவுட் ஆகி வெளியேறினார்.  ரிசப் இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 50 ரன்களும், விராட் கோலி 24 ரன்களும்,தோணி 29 ரன்களும் எடுத்து  இந்திய அணி 20 ஓவர்கள் முடிந்த நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து.

india vs austrelia

இந்தநிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு 127 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. ஆனால் இந்த வெற்றி இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் எளிதாகவே இருக்கும் என கருதப்பட்டது.

இதனையடுத்து ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடி, 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து வந்த மட்டையாளர்கள் இந்திய அணியின் பந்து வீச்சிற்கு தடுமாறினர்.

india vs austrelia

ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறுவதற்கு இறுதி ஓவரில் 14 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. இறுதி ஓவரினை உமேஷ் யாதவ் வீசினார். மிகவும் விறுவிறுப்பாக போன ஆட்டத்தில், இறுதி பந்தில் 2 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழலில் லாவகமாக 2 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

இந்திய அணியில் குருனால் பாண்டியா 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்து 16 ரன்கள் கொடுத்திருந்தார். பும்ரா 4 ஓவரில் 3 விக்கெட் எடுத்து  16 ரன்கள் கொடுத்திருந்தார்.