மைதானத்தில் சண்டையிட்டு கொண்ட இஷாந்த், ஜடேஜா; வைரலாகும் வீடியோ.!

மைதானத்தில் சண்டையிட்டு கொண்ட இஷாந்த், ஜடேஜா; வைரலாகும் வீடியோ.!


india vs australia 2nd test match perth

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பில்டிங் செய்துகொண்டிருந்த இந்திய அணி வீரர்களான இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 T-20 , 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியில் வெற்றி பெற்றது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது.

tamilspark

இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, 283 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி அடுத்ததடுத்து விக்கெட்டை பறிகொடுத்து, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதில் இந்திய அணி கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 42 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் மிகவும் மோசமாக பறிகொடுத்து படு தோல்வியை சந்தித்தது.  

இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் ஆட்டத்தின் போது, இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் பீல்டர்களை நிறுத்தும் இடத்திற்காக என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.