முதல் பந்திலேயே முக்கியமானதை கோட்டை விட்ட இந்திய அணி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

முதல் பந்திலேயே முக்கியமானதை கோட்டை விட்ட இந்திய அணி! அதிர்ச்சியில் ரசிகர்கள்



india ;ost review in very first ball of semifinal

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டமானது இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

வெற்றிக்கு காரணியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாஸ்ஸில் நியூசிலாந்து அணி வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் நடந்த போட்டியில் இடம் பெற்றிருந்த குல்தீப் யாதவிற்கு பதிலாக சாகலும் நியூசிலாந்து அணியில் சவுதி நீக்கப்பட்டு பெர்குஸனும் களமிறங்கியுள்ளார்.

wc2019

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்டில் மற்றும் நிகோலஸ் களமிறங்கினர். இந்திய அணிக்காக முதல் ஓவரை புவனேஸ்வர்குமார் வீசினார். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை மார்க்கெட்டில் சந்தித்தார். சிறப்பாக வீசப்பட்ட அந்த முதல் பந்து கப்திலின் காலில் பட்டது. அனைவரும் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என தெரிவித்தார்.

wc2019

புவனேஸ்வர்குமார் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரிவ்யூ கேட்டிருந்தார். பின்னர் ரிவ்யூ செய்த மூன்றாவது நடுவர் பந்து ஸ்டம்பைத் விட்டு விலகிச் சென்றதால் அவுட் இல்லை என தெரிவித்து விட்டார். இதனால் இந்திய அணி முதல் பந்திலேயே இருந்த ஒரே ஒரு ரிவ்யூவை இழந்தது.