தல, தளபதி இரண்டுபேரும் இல்லனா இதுதான் நிலைமை! இந்தியா படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்!

தல, தளபதி இரண்டுபேரும் இல்லனா இதுதான் நிலைமை! இந்தியா படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்!



india-lost-very-worst-in-4th-odi

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரின் 4 மற்றும் 5 ஆவது போட்டிகளில் இருந்து கோலிக்கு ஏற்கனவே ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிய தோனி காயம் காரணமாக மூன்றாவது மற்றும் இந்த நான்காவது போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் இறக்கப்பட்டார். 

cricket

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. முதல் 5 ஓவர்களில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா பொருமையாக ஆடினார்கள். போல்ட் வீசிய 6 ஆவது ஓவரிலிருந்து ஆட்டம் முற்றிலும் மாற துவங்கியது. 

6 ஆவது ஓவரில் அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்த போது தவான்(13), 8 ஆவது ஓவரில் ரோகித்(7) ரன்களில் போல்ட் பந்தில் அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து முதல் ஒருநாள் போட்டியிலேயே விரைவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த உற்சாகத்துடன் பவுண்டரி அடித்து தனது ஒருநாள் இலக்கை துவங்கினார் சுபம் கில். 

cricket

ஆனால் பொறுப்புடன் ஆடி அவருக்கு கைக்கொடுக்க வேண்டிய நடுநிலை ஆட்டக்காரர்களான ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் கிராண்ட்கோம் வீசிய 11 ஆவது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பாவம் சுபம் கில் அவரும் அடுத்த ஓவரிலேயே 9 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் வெளியேறினார். 

இந்த நிலையில் தான் இந்திய அணிக்கு கோலி மற்றும் தோனியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திருப்பர். தோனி இந்த ஆட்டத்தில் இருந்திருந்தால் நிச்சயம் கில்லிற்கு கைக்கொடுத்து அணியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்திருப்பார். இதற்கு பல ஆட்டங்களை உதாரணமாக சொல்லலாம். 

cricket

மிடில் ஆர்டரில் தங்களது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பினை ராயுடு, தினேஷ் கார்த்திக் மற்றும் ஜாதவ் தவறவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்திய அணி 40 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஆடிய பாண்டியா(16), குலதீப்( 15), சாகல்(18) ரன்கள் அடிக்க இந்திய அணி 92 ரன்கள் எடுத்தது. 

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் கப்டில், புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரின் முதல் 3 பந்துகளிலேயே 14 ரன்கள் அடித்து 4 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வில்லியம்சன் 11 ரன்னில் அவுட்டாக 14.4 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.