விளையாட்டு

"உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா அல்ல; இந்த அணி தான்" - கவாஸ்கர்

Summary:

India is not on top to win World cup

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியான முதல் அணி இங்கிலாந்து தான். இந்திய அணி 2 ஆவது இடத்தில் தான் உள்ளது என கவாஸ்கர் கூறியுள்ளார். 

2019 உலககோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் இறுதியில் துவங்கி ஜூலை மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த உலககோப்பையை வெல்ல அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள முதல் அணி இங்கிலாந்து தான். இதற்கு காரணம் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது என்பதால் அல்ல; திறமையிலும் அவர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். 

2015 உலககோப்பையில் லீக் ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணி வங்கதேசத்திடம் தோல்வியுற்றது. ஆனால் அதன் பின் இந்த நன்கு ஆண்டுகளில் இங்கிலாந்து அணி அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. சிறந்த ஓப்பனர்கள், மிடில் ஆர்டர்கள், ஆல் ரவுண்டர்கள் என பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து இருந்து வருகிறது. 

மேலும் கோப்பையை வெல்ல தகுதியான இரண்டாவது அணி இந்தியா தான். 2017, 2018 ஆம் ஆண்டுகளில் இந்தியா அணி இங்கிலாந்தில் ஆடியுள்ளதால் இந்திய அணிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன. 


Advertisement