ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து விராட் முதலிடம்; முன்னேறி வரும் பாபர் அசாம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து விராட் முதலிடம்; முன்னேறி வரும் பாபர் அசாம்!Icc test batsmen rankings

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் பாபர் அசாம் முதல்முதலாக முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். 

பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 5 ஆவது டெஸ்ட் சதத்தை(143) விளாசிய பாபர் அசாம் 800 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார். டி20யில் முதலிடம், ஒருநாள் போட்டியில் 3 ஆவது இடம் என அனைத்து வகையான போட்டிகளிலும் பாபர் அசாம் முதல் 5 இடங்களில் உள்ளார்.

Icc test batsmen rankings

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் ஸ்மித், லாபஸ்கேன்ஜ் மற்றும் வில்லியம்சன் உள்ளனர்.

இந்த தரவரிசையில் ஏற்கனவே 5 மற்றும் 6 ஆவது இடங்களில் இருந்த வார்னர் மற்றும் இந்திய அணியின் புஜாரா அளுக்கொரு இடங்கள் சரிந்து 6 மற்றும் 7 ஆவது இடங்களில் உள்ளனர்.