"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
யுவராஜை தொடர்ந்து பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த செய்தி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான இயான் சேப்பல் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர் அஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெயரையும் எடுத்தவர். இந்நிலையில் அதிக நேரம் வெயிலில் நின்றதால் புறஊதா கதிர்களால் பாதிக்கப்பட்டு தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சேப்பல்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கதிரியக்கம் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடலில் இருந்து புற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருவதாகவும், விரைவில் பூரண குணமடைவர் எனவும் கூறப்படுகிறது.