விளையாட்டு

நடப்பு சாம்பியன்ஸ் மும்பைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்.! வேற லெவல் பையா.!

Summary:

14-வது ஐ.பி.எல் தொடரின் முதல் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில்,

14-வது ஐ.பி.எல் தொடரின் முதல் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசினார்.நேற்றய ஆட்டத்தின் இறுதி ஓவரில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஹர்ஷல் பட்டேல் நான்கு ஓவர்கள் வீசி 27 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிகளில் நடப்பு சாம்பியன்சான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ஹர்சல் பட்டேல் பெற்றுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் வரை ஆடி 8 விக்கெட்டை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணியை முதல் ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ஹர்ஷல் பட்டேலின் சிறப்பான பந்து வீச்சே பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


Advertisement