உலகமே பாராட்டிய ஒரு ஒலிம்பிக் வீரரின் மனதை உருக்கும் சோக கதை.. ராஜா மாதிரி இருந்தவர் அன்றாட சாப்பாட்டுக்கு படும் கஷ்டம்

உலகமே பாராட்டிய ஒரு ஒலிம்பிக் வீரரின் மனதை உருக்கும் சோக கதை.. ராஜா மாதிரி இருந்தவர் அன்றாட சாப்பாட்டுக்கு படும் கஷ்டம்



Heartbreaking Story Of Olympic Champion Ruben Limardo

ஒருகாலத்தில் ஒரு நாடே ஒருவரை தலையில் தூக்கி வச்சு கொண்டாடிய நிலையில் இன்று அந்த நபர் சாப்பாட்டிற்காக உணவு டெலிவரி செய்து பிழைப்பு நடத்திவரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா நாட்டை சேர்ந்தவர் வாள்சண்டை வீரரான ரூபன் லிமார்டோ. கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். லத்தீன் அமெரிக்க பகுதியில் இருந்து வந்து வாள்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் இவர் என்று உலகமே இவரை பாராட்டியது.

Viral News

தங்கள் நாட்டிற்க்காக தங்க பதக்கம் வாங்கியதை அடுத்து அந்த நாடு முழுவதும் ரூபன் லிமார்டோ ஹீரோவாக பார்க்கப்பட்டார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த இவர் தற்போது கொரோனா காரணமாக தனது வாழ்வாதரை இழந்து பெருமளவில் சிரமப்பட்டுவருகிறார்.

தனது அன்றாட தேவைகளுக்குகாக போலந்து நாட்டில் உள்ள லோட்ஸ் நகரில், உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ரூபன் லிமார்டோ. நாள் ஒன்றுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று உணவு டெலிவரி செய்யும் இவருக்கு வார இறுதியில் 100 யூரோ வரை பணம் கிடைப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த அனுபவம் தன்னை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்ய உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருசில விளையாட்டுவீரர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கும் இதே உலகில் நாட்டுக்கா பெருமை சேர்த்த ரூபன் லிமார்டோ போன்ற வீரர்களும் உள்ளனர் என்று நினைக்கையில் அவரது இந்த நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.