இந்தியா விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் மாரடைப்பு.!

Summary:

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் மாரடைப்பு.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட் டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான 51 வயதான இன்சமாம் உல் ஹக், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ் தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் பேட்டிங் ஆலோசகர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் அணிக்காக பணியாற்றினார். மேலும், 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இன்சமாம் உல் ஹக் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் நலம்பெற அவரது ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement