அளவுக்கு மீறிய அன்பு! தல தோனி வெறியர்கள் செய்த நெகிழ்ச்சியான செயலை பார்த்தீங்களா.!!

அளவுக்கு மீறிய அன்பு! தல தோனி வெறியர்கள் செய்த நெகிழ்ச்சியான செயலை பார்த்தீங்களா.!!


hashtag for dhoni

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 

எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. மேலும் அடுத்தடுத்ததாக முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில் இந்திய ரசிகர்கள்  நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இருந்தனர்.

dhoni

இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்தனர்.ஆனால் அவர்களும் விக்கெட்டை இழந்து வெளியேறியதை தொடர்ந்து  இந்தியா 18  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இருப்பினும் தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம்தான் உள்ளது.இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து அறிவிக்கவிருப்பதாக கருத்துக்கள் எழுந்தது. இந்நிலையில் அவருக்காக ரசிகர்கள் செய்துள்ள செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் தோனி  ஓய்வு பெறக்கூடாது என வலியுறுத்தும் வகையில் #DhoniInBillionHearts என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் டுவிட்டரில் டிரண்ட் செய்து வருகிறார்கள். இந்த ஹேஸ்டேக்  இந்திய அளவில் 3 வது இடத்தில் உள்ளது.மேலும் ரசிகர்கள் பலரும் தோனி மீது இருக்கும் அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தும்விதமாக பல பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.