கிரிக்கெட்டில் கெத்து காட்டும் மாற்றுத் திறனாளி சிறுவன்! இது தான் நட்பு!

கிரிக்கெட்டில் கெத்து காட்டும் மாற்றுத் திறனாளி சிறுவன்! இது தான் நட்பு!



Handicap boy playing cricket


கிரிக்கெட் 1877 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. இந்த காலகட்டங்களில் இங்கிலாந்தில் மட்டும் விளையாடப்பட்டு வந்த ஆட்டம் தற்போது, மூலை முடுக்கெல்லாம் விளையாடப்படுகிறது.

பதினேழாம் நூற்றாண்டுவரை பெரிதும் குழந்தைகள் விளையாட்டாக இருந்து வந்த கிரிக்கெட், இந்த நூற்றாண்டில் பெரியவர்களாலும் விளையாடப்பட்டது என கூறுகிறது வரலாறு. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும் கிரிக்கெட்டுக்கு தான் இந்தியாவில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழகத்தில், பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் எழுதும் சிலேட்டில்(கரும்பலகை) கிரிக்கெட்டை தொடங்குகின்றனர். பேட்டிற்கு பதிலாக சிலேட்டையும், பேப்பர்களை சுற்றி வளைத்து அதனை பந்தாகவும் வைத்து கிரிக்கெட் ஆடியது அனைவருக்கும் ஞாபகம் வரும். 

எப்போதுமே பள்ளி மாணவர்களின் நட்புக்கு ஜாதி, மத பேதம் எல்லாம் கிடையாது. அவர்களுக்குள் நட்பு பாராட்ட, உடல் ஊனமும் ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், தனது நண்பர்களுடன் மாற்றுத் திறனாளி சிறுவன், மிக அசிறப்பாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.