யார் திமிர் பிடித்தவன்? நீங்க இந்தியா வாங்க உங்கள ......அங்க கூப்டு போறேன்! அப்ரிடிக்கு பதிலடி கொடுத்த கவுதம் காம்பீர்!

gowtham kampir talk about Afridi


gowtham kampir talk about Afridi


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து "தி கேம் சேஞ்சர்" எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, காம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவருக்கு எந்தவிதமான ஆளுமைத் திறனும் கிடையாது. ஆனால் ஏராளமான திமிருடன் நடந்து கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அப்ரிடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவுதம் காம்பீர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ஷாகித் அப்ரிடி, நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக இந்திய அரசு விசாவை இன்னும் வழங்கிவருகிறது. எனவே இந்தியாவுக்கு வாருங்கள், தனிப்பட்ட முறையில் நான் உங்களை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.