இந்தியா விளையாட்டு

சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரா? விராட் கோலியா? சற்றும் யோசிக்காமல் பதிலளித்த கம்பீர்!

Summary:

goudham gampir talk about best batsman

பிரபல தொலைக்காட்சி ஒன்றில்,சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடும்பொழுது, இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வி இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த கம்பீர் சற்றுகூட யோசிக்காமல், தயங்காமல் சச்சின் தான் சிறந்தவர் என கூறி அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கம்பீர் கூறுகையில், சச்சின் விளையாடிய காலத்தில் விதிமுறைகள் வேறு மாதிரி இருந்தது. ஒரு வெள்ளைநிற பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேலும், 4 பீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்திற்குள் நிறுத்தப்பட்டனர்.

விராட்கோலி சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளன. இரண்டு முனையிலும் புதிய பந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் பந்து பழசாகி ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.

சச்சின் விளையாடிய காலத்தில் 230 முதல் 240 ரன்கள் எடுத்தாலே அப்போது வெற்றிக்குரிய இலக்காக இருந்தது. அதற்கு விதிமுறைகளும் காரணமாய் இருந்தது. நீண்ட காலம் விளையாடியதற்காகவும், விதிமுறைகள் அடிப்படையிலும் சச்சினை தேர்வு செய்கிறேன் என கம்பீர் கூறினார்.


Advertisement