ஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகிய மேலும் ஒரு நிறுவனம்.. எப்படி சமாளிக்கப் போகிறது பிசிசிஐ!

ஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகிய மேலும் ஒரு நிறுவனம்.. எப்படி சமாளிக்கப் போகிறது பிசிசிஐ!



Future withdraw associate sponsorship for ipl

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ளது. இதற்கான அணி வீரர்கள் யூஏஇக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இந்தியா - சீனா எல்லையில் பதட்டம் நிலவுவதால் ஐபிஎல் டைடில் ஸ்பான்ஸரில் இருந்து விவோ நிறுவனம் முதலில் விலகியது. தற்போது ட்ரீம்11 டைடில் ஸ்பான்ஸராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Ipl 2020

இந்த பிரச்சனை தீர்ந்தவுடன் பிசிசிஐக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக அசோஸியட் ஸ்பான்ஸராக ஏற்கனவே ஒப்பந்தம் செய்த ஃப்யூச்சர் நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்ஸரில் இருந்து விலகியது. 

அதனைத் தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அன்அகாடமி என்னும் கல்வி நிறவனம் அசோஸியட் ஸ்பான்ஸராக பிசிசிஐ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இரண்டாவது அசோஸியட் ஸ்பான்ஸரை உறுதி செய்ய இயலாமல் பிசிசிஐ திணறி வருகிறது.