உலகம் விளையாட்டு

உலக அளவில் ரசிகர்களை கொண்ட பிரபல கால்பந்து வீரர் திடீர் கைது! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

football player arrest

பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ, பிரேசில் அணி 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்தார். பராகுவே நாட்டிற்குள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நுழைய முயன்றதாக ரொால்டினோ மற்றும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் போலீசார் கைது செய்த போதும், காவல் நிலையம் அழைத்து செல்லவில்லை என்றும், நேரடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வாய்ப்பளித்துள்ளனர். இந்தநிலையில், ரொனால்டினோ சகோதரர்களுடன் வந்த ஒரு நபர் அவர்களை ஏமாற்றியதாகவும், அந்த நபரை பின்னர் போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும் வென்றுள்ளார். மேலும், உலகப் புகழ் பெற்ற பார்சிலோனா அணியிலும் இவர் விளையாடியுள்ளார். இந்தநிலையில் அவரது கைது உலக ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement