முதல் போட்டியிலே இந்திய அணியை திக்குமுக்கு ஆடவைத்த நியூசிலாந்து! இந்திய அணியை காப்பாற்றிய மழை!

முதல் போட்டியிலே இந்திய அணியை திக்குமுக்கு ஆடவைத்த நியூசிலாந்து! இந்திய அணியை காப்பாற்றிய மழை!



first-test-play-delayed-due-to-wet-outfield

இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதில் 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

இந்தநிலையில், நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

test

இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். இந்திய அணி ஆரம்பத்திலே தடுமாற்றத்தை சந்தித்தது. பிரித்வி ஷா, புஜாரா,விராட் கோலி, ஹனுமா விகாரி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் மட்டும் 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 

தடுமாற்றத்துடன் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அந்த சமயத்தில் திடீரென மழை வந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் கிரிக்கெட் ரசிகர்கள், முதல் போட்டியிலே தடுமாறிய இந்திய அணியை மழை வந்து காப்பாற்றியது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.