ரோகித் சர்மாவின் சிக்சர் மழையை தடுத்து நிறுத்திய வானிலை! முதல் நாள் ஆட்டம் ரத்து

First test first day dropped after rain


First test first day dropped after rain

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த ரோகித் சர்மா இந்த டெஸ்ட் போட்டியிலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 

Rohit sharma

அவருடன் மயங் அகர்வால் களமிறங்கினார். துவக்கத்தில் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 29 ஆவது ஓவரில் அரைசதத்தை கடந்தார். அவரைத் தொடர்ந்து பொருமையாக ஆடி வந்த மயங் அகர்வால் 37 ஆவது ஓவரில் அரைசதத்தை எட்டினார்.

அதன் பின்னர் ரோகித் சர்மா தனது வழக்கமான அதிரடியை காட்டத் துவங்கினார். 54 ஆவது ஓவரில் ரோகித் சர்மா தனது 4 ஆவது டெஸ்ட் சதத்தை விளாசினார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே ரோகித் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. 

Rohit sharma

ஆட்டத்தின் 60 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 59.1 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 115, மயங் அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.