விளையாட்டு

பெங்களூரு அணிக்கு அடிமேல் அடி.! விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்.!

Summary:

fined for virat kohli

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 97 ரன்கள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணிகள் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 69 பந்துகளில் 7 சிக்ஸா், 14 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து, 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 4 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் சரிந்தன. இறுதியில் பெங்களூரு அணி 109 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 97 ரன்கள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில், மைதானத்தில் பந்து வீசுவதற்கு ஆர்சிபி அணியினர் கால தாமதம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. பெங்களூரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்சிபி தோல்வியடைந்ததில் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த அபராதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement