விளையாட்டு

சிஎஸ்கே அணியின் சட்டை கலரை மாற்றுமாறு கேட்ட ரசிகர்..! அதற்கு சென்னை அணி கொடுத்துள்ள பதிலை பாருங்கள்..!

Summary:

Fan asked to change csk jersey and its color

ஐபில் கிரிக்கெட் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றால் சொல்லவே தேவை இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் சென்னை அணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சில மாதங்களில் இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை மாற்றுமாறும், அதன் கலரை மாற்றுமாறும் ரசிகர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு டிவிட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, என்ன விளையாடுறிங்களா? மஞ்சள் கலர்தான் நம் எல்லோருக்கும் தேவையான ஓன்று என பதிலளித்துள்ளது.

மேலும், இந்த ட்விட்டுக்கு ரசிகர்கள் பலரும் பதிலளித்துள்ளனனர். தயவு செய்து ஜெர்சி மற்றும் கலரை மாற்ற வேண்டாம் எனவும், அது கலர் இல்லை, பல கோடி ரசிகர்களின் உணர்வு என மற்றொரு ரசிகர் பதிலளித்துள்ளார்.


Advertisement