யாரு இடத்துல வந்து யாரு சீன போடுறது.. பாக்கிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து அணி!

யாரு இடத்துல வந்து யாரு சீன போடுறது.. பாக்கிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து அணி!


england-won-in-2nd-t20-against-pakistan

பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. ஹபீஸ் 69, பாபர் அசாம் 56 ரன்கள் எடுத்தனர்.

இமாலய இலக்கை எட்டிப்பிடிக்குமா இங்கிலாந்து என எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து அணியின் பெயர்ஸ்டோவ் வழக்கபோல ஆட்டத்தை அதிரடியுடன் துவங்கினார். 6.2 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்த நிலையில் பெயர்ஸ்டோவ் 24 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Pak vs eng t20

அவரைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே பான்டன்(20) ரன்களில் ஆட்டமிழக்க மாலன் மற்றும் மோர்கன் ஜோடி சேர்ந்தனர். மோர்கன் பாக்கிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். மோர்கன் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மாலன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்திருந்தார்.