பெரிய ஸ்கோர் அடித்தும் கோட்டைவிட்ட இந்தியா.. அசால்ட்டா வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி..England won by 6 wickets against to india 2nd ODI

இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வழக்கம்போல் பீல்டிங்கை தேர்வு செய்தநிலையில், இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. ரோஹித் ஷர்மா, தவான் இருவரும் ஓப்பனிங் இறங்கியநிலையில், தவான் 4 ரன்களுக்கும், ரோஹித் ஷர்மா 25 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

ind vs eng

இதனை அடுத்து KL ராகுலுடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் விராட்கோலி மிக சிறப்பாக விளையாடியநிலையில், விராட்கோலி 66 ரன்களிலும், KL ராகுல் 108 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களை அடுத்து இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 7 சிக்ஸ்ர், 3 பவுண்டரி அடித்து 77 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது. 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பாரிஸ்டோவ் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர்.

ஜேசன் ராய் 55 ரன்களிலும் ஜானி பாரிஸ்டோவ் 124 ரன்களிலும் ஆட்டம் இழந்த நிலையில், அடுத்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ்  மிக அதிரடியாக விளையாடி 99 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 43.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 337 ரன்கள் அடித்து ௬ விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று தொடரில் சமநிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றிபெறும் அணியே கோப்பையை கைப்பற்றும் என்பதால் தற்போதில் இருந்தே விறுவிறுப்பு கூடியுள்ளது.