கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!
கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதாக இருந்த தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸால் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் மட்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் ஐபிஎல் 2020 தொடரானது வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகளுக்கும் இடையே மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டிகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள டெஸ்ட் தொடருடன் சேர்த்து நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.