தொடங்கியது நான்காவது யுத்தம்; டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டனின் முடிவு என்ன?

தொடங்கியது நான்காவது யுத்தம்; டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டனின் முடிவு என்ன?


eng-vs-ind-2018-fourth-test-toss-report-england bat first

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டியில் வெற்றியும், இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.

இங்கிலாந்தின் சவுத்தாம்படனில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியில் களம் காண  உள்ளனர்.

அதே போல் இங்கிலாந்து அணி வோக்ஸிற்கு பதிலாக சாம் குர்ரான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், மொய்ன் அலியும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

cricket

இந்த போட்டிக்கான இந்திய அணி;

ஷிகர் தவான், கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரவிசந்திர அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி;

அலெய்ஸ்டர் குக், கெட்டான் ஜென்னிங்ஸ், ஜோ ரூட், ஜானி பாரிஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், மொய்ன் அலி, சாம் குர்ரான், அடில் ரசீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.