தல தோனி குடும்பத்தில் விரைவில் குவா.. குவா... தீயாய் பரவும் தகவல்.!

தல தோனி குடும்பத்தில் விரைவில் குவா.. குவா... தீயாய் பரவும் தகவல்.!


 Dhoni wife is pregnant

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சென்னை அணி கேப்டன் தோனியின் தலைமையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது சென்னை அணி. 

நேற்று இறுதிப்போட்டி முடிந்த பின்னர் தோனியின் மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவா ஆகியோர் மைதானத்தில் தோனியை கட்டிபிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

இந்த நிலையில், தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக உள்ளதாகவும், விரைவில் ஜிவாவுக்கு சகோதரி அல்லது சகோதரன் வரப்போகிறான் என்ற செய்தியை பிரியங்கா ரெய்னா உறுதிப்படுத்தியதாக இணைய தளங்களில் செய்திகள் தீவிரமாக பரவி வருகிறது.