5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசிய தல தோனி! வெளியான வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்

5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசிய தல தோனி! வெளியான வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்


Dhoni smashes 5 sixes in 5 balls

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி வலைப்பயிற்சியின் போது தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

MS Dhoni

உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடரில் தான் விளையாடவுள்ளார்.

இந்த தொடருக்காக சென்னை வீரர்களுடன் தல தோனி. கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று நடைபெற்ற வலைபயிற்சியின் போது தோனி தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசும் வீடியோவினை ஸ்டார் ஸ்பபோர்ட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தோனியின் இந்த பார்மினை பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.