தல தோனிக்கு நிகர் யாரும் இல்லை; சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் அளித்துள்ள டான் ரோகித்.!

தல தோனிக்கு நிகர் யாரும் இல்லை; சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் அளித்துள்ள டான் ரோகித்.!



dhoni-should-not-be-compared-to-anyone-he-is-unique-says-rohit-sharma

இணைய நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த கூல் கேப்டன் யாராக இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்பொழுது சிறிதும் யோசிக்காமல் அது டான் ரோகித்தாகாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் இளம் வீரர்களிடம் இயல்பாக பழகக்கூடியவர். ஓய்வு அறையில் அனைத்து வீரர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதனை செயல்படுத்துபவர்.

அமைதியான குணம் கொண்ட அவரிடம் தல தோனியின் சாயலை பார்த்திருக்கிறேன். சோர்ந்து போய் இருக்கும் வீரர்களிடம் சென்று தன்னம்பிக்கையோடு புத்துணர்ச்சி அளிப்பார். கேப்டன் என்ற தலைக்கனம் இல்லாமல், சக அணி வீரர்களுள் ஒருவராக இருந்து அணியை வழி நடத்துவார்.

எப்போதுமே நேர்மறை எண்ணங்களுடன் இருப்பவர். அதேபோல், மற்ற வீரர்களுக்கும் அதை மாதிரியான எண்ணங்களை விதைக்கக் கூடியவர்” என்று தெரிவித்திருந்தார். சுரேஷ் ரெய்னா இவ்வாறு கூறியிருந்தது இணையத்தில் வைரலானது.

rohit

 தற்போது, இதுபற்றி ட்விட்டரில் வீடியோ ஒன்றை ரோஹித் ஷர்மா வெளியிட்டுள்ளார். “சுரேஷ் ரெய்னா பேசியிருந்த அந்த காணொலியைப் பார்த்தேன். எம்.எஸ். தோனிக்கு நிகர் அவர் மட்டுமே. அவரை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. ஒவ்வொரு மனிதரும் தனித்துவமிக்க குணாதிசயங்களைக் கொண்டிருப்பர். அவர்களுக்கென்று பலமும் இருக்கும் பலவீனமான பக்கங்களும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

ரோஹித் இதுவரை இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 8 வெற்றிகளையும், 19 டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 15 வெற்றிகளையும் பெற்றுத் தந்துள்ளார். இலங்கையில் நிடஹாஸ் டிராபியை இந்தியா வெல்லும்போதும் ரோஹித் ஷர்மா கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.