சால்ட் அண்ட் பெப்பர் லுக்..! முகமெல்லாம் ஊதி, சற்று குண்டாகிவிட்டாரா தோனி..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!Dhoni salt and pepper style latest photos goes viral

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டில் ஓய்வு எடுத்துவரும் தல தோனியின் சமீபத்திய புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததில் இருந்து தோனி எந்த ஒரு சர்வேதச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இனி அவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்பதே ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

dhoni

இதனிடையே ஐபில் போட்டிகளில் தோனியை காண ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக ஐபில் போட்டிகள் நிறுத்தப்பட்டது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊரில் ஓய்வு எடுத்துவரும் தோனி தனது மகளுடன் தோட்டத்தில் பைக் ஓட்டுவது, நாய்க்கு கேட்ச் பயிற்சி கொடுப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

தற்போது தல அஜித் ஸ்டெயிலில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டெயில் இருக்கும் தோனியின் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. மேலும், அந்த புகைப்படத்தில் தோனியின் முகம் சற்று ஊதி இருப்பதாகவும், உடலும் சற்று குண்டாக மாறியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

dhoni