சின்னபிள்ளைத்தனமாய் ஓடிப்பிடித்து விளையாடிய தோனி! அதுவும் யாரோட தெரியுமா? வைரலாகும் வீடியோ!!

dhoni play with fan in ground


dhoni-play-with-fan-in-ground

2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி சேப்பாக்கம் எம்.ஏ.சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சியில்  ஈடுபட்டுள்ள கிரிக்கெட் வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்களுக்கு இலவசமாக 3 கேலரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். அப்பொழுது திடீரென ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி தோனியை சந்திக்க ஓடினார். 

dhoni

அவரை பார்த்த தோனி அவரிடம் சில நிமிடங்கள் ஓடி பிடித்து விளையாடினார். அதனை தொடர்ந்து அந்த ரசிகரை பாதுகாவலர்கள் பிடித்தனர் அப்பொழுது தோனி அவரிடம் கைகுலுக்கி அனுப்பி வைத்தார். இந்த வீடியோ சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.